Thursday, August 31, 2006

செ.அரங்கரின் தமாஷ் பேட்டி !

அ.தி.மு.க விலிருந்து சமீபத்தில் வெளியேறி இருக்கும் முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் ஜூ.வி க்கு பேட்டி அளித்துள்ளார்.

1. கட்சியை விட்டு வந்தீர்கள் சரி... மதம், ஆன்மிகம் என்று சொல்லி திராவிட இயக்கத்தின் அடிப்படையையே சந்தேகப்பட வைத்திருக்கிறீர்களே ...?

பதில்: சந்தேகமும் இல்லை. குழப்பமும் இல்லை. இந்தப் பத்தாண்டுகளில் எனக்குப் பல நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில விஷயங்களை, பிரச்சினைகளை ஆழமாகக் கவனித்தால், மதத்தின் அவசியமும், ஆன்மிகத்தின் அற்புதமும் புரிகிறது (இப்போதாவது புரிந்து கொண்டாரே !!!!)

பெரியாரே நாத்திகர் அல்ல என்பது என் கருத்து.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும், OK யா ;-))

அவர் முழு நாத்திகராக இருந்தால், முகமது நபியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருக்க மாட்டார். அரிஜன மக்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரிப் போராடி இருக்கவும் மாட்டார்.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப சத்தமா சிரிக்கணும், OK யா ;-)) இட்லிவடை மாதிரி, உங்களையெல்லாம் சிரிக்கக்கூடாதுன்னு நான் சொல்லவே மாட்டேன் :)))

ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு சொல்லி கோயில்களை நிர்வகித்ததைத் தான் அவர் எதிர்த்தார்
(இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தானே !)

2. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள், ஆன்மிகமா, அரசியலா ?

பதில்: ஆன்மிகத்தின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவேன். அரசியலிலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது (?!).
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப அழ ஆரம்பிக்கணும், OK வா ;-))

ஆனால், எங்கிருந்து அதைச் செய்வது என்று முடிவு செய்யவில்லை
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப பேய் முழி பெருமுழி முழிக்கணும், OK வா ;-))

பேட்டி இனிதே முடிவடைந்தது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஜுனியர் விகடன்

6 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

"(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப அழ ஆரம்பிக்கணும், OK வா ;-))"

அதுக்கு முன்னாலே நீங்க உங்களை வைக்கோவா மாத்திக்கணும்:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

//அதுக்கு முன்னாலே நீங்க உங்களை வைக்கோவா மாத்திக்கணும்:)))
//
purialaiyE !!!!

கதிர் said...

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா!!

கதிர் said...

//அதுக்கு முன்னாலே நீங்க உங்களை வைக்கோவா மாத்திக்கணும்:)))
//
purialaiyE !!!!

வைக்கோவையும், அழுகையையும் பிரிக்க முடியாதுன்னு சொல்றாரு நம்ம டோண்டு.

பி.கு: க்ளிசரினெல்லாம் வைக்கோகிட்ட பிச்சைதான் வாங்கணும்.

enRenRum-anbudan.BALA said...

//
தம்பி said...
//அதுக்கு முன்னாலே நீங்க உங்களை வைக்கோவா மாத்திக்கணும்:)))
//
purialaiyE !!!!

வைக்கோவையும், அழுகையையும் பிரிக்க முடியாதுன்னு சொல்றாரு நம்ம டோண்டு.
//
தம்பி அய்யா,
என் சிற்றறிவுக்கு எட்ட விட்டதற்கு மிக்க நன்றி :)))))

ச.சங்கர் said...

>>>>அரசியலிலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது (?!).<<<<<<

என்னது...ஊழல்தானே..போட்டு தாக்குங்க...அரங்கு

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails